தீப கொப்பரை மலை உச்சியில் நிறுத்தம்
50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுமந்து சென்ற தீப கொப்பரை மலை உச்சியில் நிறுத்தம்….
திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நாளை 24ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

மகா தீபம் ஏற்றப்பட உள்ள தீப கொப்பரைக்கு இன்று அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை செய்து 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தோளில் சுமந்து தீப கொப்பரை மலைமீது எடுத்து செல்லப்பட்டது. 300 கிலோ எடை கொண்ட ஐந்தே முக்கால் அடி உயரம் கொண்ட தீப கொப்பரை ஒன்பது மணி நேரத்திற்கு பிறகு மலை உச்சியை அடைந்தது.
மலை உச்சியை அடைந்த தீப கொப்பரைக்கு கற்பூரம் ஏற்றி அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு வழிபாடு செய்தனர்.


