in

ராட்சத டபராக்களில் தயாராகும் அறுசுவை அன்னதானம்

ராட்சத டபராக்களில் தயாராகும் அறுசுவை அன்னதானம்

 

ராட்சத டபராக்களில் தயாராகும் அறுசுவை அன்னதானம்…. இரண்டு நாட்களில் 2 லட்சம் பேருக்கு அன்னதானம் தயார்…..

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நாளை மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2668 உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்த மகா தீப தரிசனத்தை காண உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து மகா தீப தரிசனத்தை பார்த்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொள்வார்கள்.

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. கிரிவலப் பாதையில் சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்கும் இடங்களில் பெரிய பெரிய ராட்சத டபராக்களில் அறுசுவை உணவு தயாராகி வருகிறது.

குறிப்பாக 3 டன் அரிசி, 1 டன் பருப்பு வகைகள், 1 டன் காய்கறி வகைகள், 150 டின் சமையல் எண்ணெய், 150 கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை கொண்டு சாதம், சாம்பார், பொறியல், ரசம், மோர் உள்ளிட்ட உணவு வகைகள் சமைக்கப்பட்டு பக்தர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று மற்றும் நாளை இரண்டு என சுமார் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று என அன்னதானம் வழங்கும் தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

What do you think?

தீப கொப்பரை மலை உச்சியில் நிறுத்தம்

சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகும் அவலம்!