in

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களை கட்டிய ஆட்டு சந்தை 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களை கட்டிய ஆட்டு சந்தை 

 

வேப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டு சந்தையில் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை களை கட்டியது.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தைக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம் அரியலூர் பெரம்பலூர் திருச்சி சேலம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வது வாடிக்கையாக உள்ளது.

 

இந்த நிலையில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை மதியம் முதலே ஆட்டுச் சந்தை துவங்கி நடைபெற்றது.

இதில் வெள்ளாடு கொடியாடு செம்மறி ஆடு உள்ளிட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

இதில் ஆடு ஒன்று 5 ஆயிரம் முதல் 20ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது தீபாவளி பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற வாரச்சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர் இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

What do you think?

திருமங்கலம் ஏழூர் சப்பரத் திருவிழா