in

 ரேஷன் அரிசி மூட்டை கடத்தல் ரகசியத் தகவல்

 ரேஷன் அரிசி மூட்டை கடத்தல் ரகசியத் தகவல்..

 

தேனி மாவட்டம், கம்பம் நகரில் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்து, கேரளாவிற்குக் கடத்திச் சென்று விற்பனை செய்ய இருப்பதாகக் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

​தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எம்.எல்.ஏ-வை, கடத்தலுக்குப் பயன்படுத்திய பொலேரோ காரை வைத்து ஏற்றிப் படுகொலை செய்ய முயற்சி செய்ததாக எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

​இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுப் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

​தேனி மாவட்டம், கம்பம் நகரில் உள்ள உதயம் நகர் குடியிருப்புப் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்து, கேரளாவிற்கு விற்பனை செய்வதற்காகக் காரில் ஒரு சிலர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருப்பதாகக் கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவிற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

​அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எம்.எல்.ஏ., சட்டவிரோதமாக நடைபெறும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுத்துக் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக முயன்றுள்ளார்.

அப்போது, நஜிமா என்ற பெண்ணின் வீட்டின் அருகே, குடியிருப்புப் பகுதியில் உள்ள முட்புதரில் மறைத்து வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளைப் பொலேரோ காரில் ஒரு சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

​அதனைக் கண்டு எம்.எல்.ஏ. அருகில் சென்றபோது, 30-க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளுடன் நின்றிருந்த பொலேரோ காரை அதிவேகமாக இயக்கி, எம்.எல்.ஏ. மீது ஏற்றுவது போல் வந்து தப்பிச் சென்றுள்ளனர். நிலைமையைச் சுதாரித்துக் கொண்ட எம்.எல்.ஏ. உடனடியாக விலகித் தப்பியுள்ளார்.

​தொடர்ந்து, இச்சம்பவம் குறித்துக் கம்பம் வடக்குக் காவல் நிலையப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், கடத்துவதற்காக மேலும் 34-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

​மேலும் தீவிர விசாரணை நடத்தியதில், அப்பகுதியைச் சேர்ந்த நஜிமா என்ற பெண் ரேஷன் அரிசியைக் கேரளாவிற்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், கம்பம் எம்.எல்.ஏ. மீது காரை ஏற்றிப் படுகொலை செய்ய முயன்றவர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

​சம்பவ இடத்தில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பெருமளவில் குவிந்துள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவுகிறது.

What do you think?

மின் மோட்டார் மற்றும் வயர்கள் தொடர் திருட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு ​

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை திறப்பு