தேனி சிவகணேச கந்த பெருமாள் கோவிலில் கந்த சஷ்டி விழா! முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!
தேனியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 9 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது
இந்த நிலையில் கந்த சஷ்டி திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று தனி சன்னதியில் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலிக்கும் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலச நீர் அடங்கிய கும்பத்தை மேளம் நாதஸ்வரம் முழங்க கோயிலை சுற்றி வந்து முருகப்பெருமானுக்கு கலச நீரால் அபிஷேகம் நடைபெற்றது
பின்னர் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்து அருள் பாலிக்கும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது
இதில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்


