in

வீடீயோக்களை நீக்கினால் உங்கள் சேனல் ‘காலி’ எச்சரிக்கும் YouTube


Watch – YouTube Click

வீடீயோக்களை நீக்கினால் உங்கள் சேனல் ‘காலி’

எச்சரிக்கும் YouTube

உங்கள் சேனலில் விடீயோக்களை டெலீட் செய்தால் உங்கள் YouTube சேனலுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகும்.

தற்போதைய நவீன பொழுதுபோக்கு உலகில் youtube தளத்தின் பயன்பாடு என்பது மிக அதிகமாகவே உள்ளது. அதனைப் பொழுதுபோக்கு தளமாக உபயோகிப்பவர்களை போலவே, அதன் மூலம் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகமாகிக்கொண்டே வருகிறது.

பல youtube சேனல்கள் நல்ல விதமாக மக்களை கவரும் விதத்தில் வீடியோக்கள் போட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். ஒரு சிலர், சில தவறான பதிவுகளையோ, அல்லது ஒருவரது மனதை புண்படுத்தும் விதமாகவோ, ஒருதரப்பு சார்பு தகவலையோ பதிவிட்டு விடுகின்றனர். இது சில சமயம் சர்ச்சையாக மாறிவிடுகிறது.

இந்த காரணங்களை கருத்தில் கொண்டு அந்த youtube சேனல்கள், குறிப்பிட்ட வீடியோவை தங்கள் தளத்தில் இருந்து அவ்வப்போது நீக்கியும் வருகின்றனர். அதேபோல் காப்பி ரைட் பிரச்சனை காரணமாகவும் youtubeஇல் இருந்து வீடியோக்கள் நீக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது youtube இல் இருந்து வீடியோக்களை நீக்குவது தொடர்பாக ஒரு எச்சரிக்கை பதிவு வெளியாகி உள்ளது. youtube தளத்தின் முக்கிய அதிகாரி (Todd B) என குறிப்பிட்டுள்ள ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அதனை பதிவிட்டு உள்ளார்.

அதில், தங்கள் சேனலில் வீடியோ தவறாக இருப்பின் அதனை டெலிட் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக அதனை பொதுமக்கள் பார்வைக்கு படாதவாறு மறைத்துவிட (Hide) வேண்டும். இதனை தவிர்த்து நீங்கள் தொடர்ந்து வீடியோக்களை டெலிட் செய்து வந்தால், ஒருவேளை உங்கள் சேனல் பொதுமக்களிடம் காட்டப்படாதவாறு மாறிவிடும் (Hide) என ஒரு எச்சரிக்கை பதிவை குறிப்பிட்டுள்ளார்


Watch – YouTube Click

What do you think?

லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரான சேசு மறைவு

புதுச்சேரி இன்று காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வேட்பு மனு தாக்கல் செய்தார்