in ,

மாதச் சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான தகவல்


Watch – YouTube Click

மாதச் சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான தகவல்…

2023-24 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக உயர்த்தி ஓய்வூதிய நிதி அமைப்பு EPFO நிர்ணயித்துள்ளது.

மாதம் சம்பளம் பெறுவோரின் வருங்கால செலவிடுகளுக்காக EPFO கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.அதற்கான ஆண்டு வட்டியாக 8.15% வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நிதி நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 1977 – 78ல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின், 2013 – 14 காலகட்டத்தில் 8.75 சதவீதமாக உயர்த்தப்பட்டது. கடந்த 2021 – 22ம் ஆண்டுக்கான வட்டி விகிதம், 2022 மார்ச்சில் அறிவிக்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீ ஸ்கந்த ஸபாநாதர் நாட்டிய ஷேத்ரா சார்பில் உலக சாதனை

மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் ஜிப்மர் ஒப்பந்த ஊழியர் பலி