in

கடலூரில் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் மகளிர் தினவிழா


Watch – YouTube Click

கடலூரில் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் மகளிர் தினவிழா

கடலூரில் பச்சையப்பா டிரஸ்டின் ஒரு அங்கமாக விளங்கும் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் 2023 24ஆம் ஆண்டுக்கான கல்லூரி ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ் சஃபினா பானு அவர்கள் தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவி இணைந்து ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் கே என் கண்ணப்பன் அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக அக்கனாமிக் கவுன்சிலிங் மெம்பர்
பிரபல சமூகபேச்சாளர் பால்கி அவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துக்கள் கூறினார்கள்.

முன்னதாக கல்லூரி முதல்வர் அவர்கள் விழாவில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார். பின்னர் கல்லூரியின் ஆண்டு அறிக்கையை சமர்பித்த பின்னர் விழாவின் சிறப்பு விருந்தினர் திரு. DR. கண்ணப்பன் பேசுகையில்
கடலூர் விழுப்புரம் ஒருங்கினைந்த மாவட்டமாக தென் ஆற்காடு மாவட்டமாக இருந்த போதுதான் இந்த பெண்களுக்கான கல்லூரி துவக்க பட்டது என்றும்
இந்த கல்லூரி நல்ல அறிவில் சிறந்தவர்களை உருவாக்கும் கல்லூரியாக
திகழ்வதாகவும் தற்போது இந்த கல்லூரி அண்ணாமலை பல்கலைகழகத்தின்
கீழ் இயங்குவதால் முதல் பட்டம் வாங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளதாகவும் மகளிர் தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் கூறினார்.

பின்னர் கல்லூரியில் அனைத்து துறைகளிலும் முதல் இரண்டு மூன்று நிலைகளில் கல்வி விளையாட்டு மற்றும் இயல் இசை நடனம் விழிப்புணர்வு நாடகம் என போட்டிகளில் பங்கேற்ற கல்லூரி மாணவிகளுக்கு விழா குழுவினர் பரிசுகள் வழங்கி மகிந்தனர் முன்னதாக டெல்லியில் என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பு மூலம்
மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி பாட்டனி படிக்கும் மாணவி தேவிப்பிரியா என்பவர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வீரநடை போட்டு பாரதப் பிரதமர் மற்றும் பார்வையாளர்களை அசத்தினார். டெல்லி சென்ரல் ஜோனில் நடைபெற்ற சிறப்பு பயிற்ச்சியில் பாரதபிரதமர் பாராட்டுதலோடு தேவிபிரியா மாணவியை
கடலூரில் நடைபெற்ற விழாவில் பாராட்டி சான்றிதழ்களை விழா குழவினர் வழங்கி கெளரவபடுத்தினர்.

பின்னர் மாணவிகளின் பரதநாட்டியம். நடைபெற்றது அனைவருக்கும்
சான்றிதழ்களும். வழங்கப்பட்டது.

அதன் பின்னர் மாணவிகள் செல்போனினால் ஏற்படும் விபரீதங்களை மவுனமான முறையில் மிக அழகாக செய்து காட்டினார்கள் செல்பி எடுக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு தண்ணீரில் கீழே விழுந்து இறப்பது போன்ற காட்சிகளும் அதில் தத்ரூபமாக நடித்து காட்டி மகிழ்ந்தனர். மேலும் காது கேளாத மாணவியின் பாரத நாட்டியம். அனைவரின் பாராட்டு தலை பெற்றது.


Watch – YouTube Click

What do you think?

திருவள்ளூர் முதல் அய்யா வைகுண்டர் வரை அனைவருக்கும் மதச்சாயம் பூசிய ஆளுநர்

மயான கொள்ளை திருவிழா போட்டி போட்டுக் கொண்டு கிழங்கை அள்ளிய  பக்தர்கள்