in

ரம்ஜான் பண்டிகை காலத்தில் கலை இழந்த வேப்பூர் ஆட்டு சந்தை


Watch – YouTube Click

ரம்ஜான் பண்டிகை காலத்தில் கலை இழந்த வேப்பூர் ஆட்டு சந்தை வியாபாரிகள், விவசாயிகள் கவலை

கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த ஆட்டு சந்தையில் வேப்பூர், சேப்பாக்கம், பெரிய நெசலூர், சிறுபாக்கம், மங்களூர், அடரி, திட்டக்குடி, கண்டபங்குறிச்சி, தொண்டங்குறிச்சி, அரியநாச்சி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கிராமத்தில் விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடைகளும் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

அவர்கள் வளர்த்து வந்த ஆடுகளை வேப்பூர் வார சந்தையில் விற்பனைக்கு செய்ய வருவார்கள் இந்த ஆடுகளை வாங்குவதற்காக திருச்சி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மதுரை, திருநெல்வேலி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சந்தை கூடியது வழக்கத்தை காட்டிலும் விவசாயிகளும், வியாபாரிகளும், மிகவும் குறைவாக வந்திருந்தனர்.

ரம்ஜான் பண்டிகை வருகின்ற 11ஆம் தேதி நடைபெற உள்ளது. குறைவாகவே ஆடுகள் விற்பனையானது ரம்ஜான் காலத்தில் வேப்பூர் ஆட்டு சந்தையில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் இடத்தில் தற்போது லட்சக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்றது.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் விதிமுறையில் 49 ஆயிரத்துக்கும் மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது அப்படி கொண்டு சென்றாள் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் உரிய ஆவணம் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும் அதற்கு ஆவணம் தேவை மேலும் விவசாயிகளும் வியாபாரிகளும் சந்தையில் வாங்கப்படும் ஆடுகளுக்கு உரிய ரசீது வழங்கப்பட மாட்டாது என்பதால் குறைவான வியாபாரிகளும் விவசாயிகளும் ஆட்டுச் சந்தையில் கலந்து கொண்டுள்ளதால் வெறிச்சோடி காணப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

பூத் சிலிப் வைத்து ஓட்டு போடலாமா? தேர்தல் ஆணையம் விளக்கம்

மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட அனிதா விஜயகுமார்..பேரனை கொண்டாடும் விஜயகுமார்