in

மோசமான பித்தலாட்ட பாஜகவை ஒழித்துகட்ட வேண்டிய தேர்தல் – சிவா, எம்.எல்.ஏ


Watch – YouTube Click

மோசமான பித்தலாட்ட பாஜகவை ஒழித்துகட்ட வேண்டிய தேர்தல் – சிவா, எம்.எல்.ஏ

 

புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

கனகசெட்டிகுளம் வைத்திலிங்கம் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களான திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மார்க்சிஸ்ட் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் பொழிலன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தேர்தல் பரப்புரையில் வைத்திலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில், இந்தியாவின் ஒற்றுமையை பலப்படுத்தவும், மதத்தின் பெயரால் இந்தியாவை துண்டாக்க நினைக்கும் பாஜகவை அகற்ற வேண்டும் என இந்த கூட்டணி உருவாகியுள்ளது.

முதலமைச்சர் ரங்கசாமி அதிக ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்துள்ளார். அவர் திறந்த நிறுவனங்கள் எத்தனை, மூடிய நிறுவனங்கள் எத்தனை என்பதை தெரியப்படுத்தவும்.

ரேஷன் கடையே இல்லாத மாநிலம் இந்தியாவில் புதுச்சேரி மட்டும் தான். மோசமான பித்தலாட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது.

பொய்யான ஆயுஷ்மான் மருத்துவ அட்டை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதில் இந்தியா முழுவதும் பலகோடி மோசடி நடந்துள்ளது. பாஜகவை ஒழித்துகட்ட வேண்டிய தேர்தல் இந்த தேர்தல் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

அடர்ந்த வனப்பகுதியில் சட்ட விரோதமான மதுபானஆலை கண்டுபிடிப்பு

புதுச்சேரி ஆரோவில்லில் 25வது தேசிய குதிரையேற்ற போட்டி