திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஆட்சியரிடம் கோரிக்கை மனு
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்: இந்து முன்னணி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்ட இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது மேலும் இந்த மனுவில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக முருக பக்தர்கள் போராடி வருகின்றனர்.
கடந்த 2025 டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில்
நீதிமன்ற உத்தரவை கடந்த அரசு உதாசீனப்படுத்தியதுடன், தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்றத்தையும் முருக பக்தர்களையும் அவமதித்தது.

அத்துடன் நில்லாமல் அரசு, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றே உத்தரவிட்டனர்.
இதனால் தற்போது புதிதாக அமைத்துள்ள தமிழக அரசு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு மதிப்பளித்து, முருக பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருப்பரங்குன்றம் மலைமேலுள்ள தீபத்தூணில் வரவிருக்கும் கார்த்திகை தீபத் திருநாளில் (நவம்பர் 24) தீபம் ஏற்றிட முன்வர வேண்டும் என்று கூறி இந்து முன்னணி சார்பிலும், தமிழக முருக பக்தர்கள் சார்பிலும் மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.


