in

மத்திய அணுசக்தி துறையின் சார்பில் புதுப்பட்டினம் ஊராட்சியில் 5 ஆயிரம் ஆர்.ஓ. வாட்டர் இயந்திரம்


Watch – YouTube Click

மத்திய அணுசக்தி துறையின் சார்பில் புதுப்பட்டினம் ஊராட்சியில் 5 ஆயிரம் ஆர்.ஓ. வாட்டர் இயந்திரம்

 

மும்பையில் உள்ள மத்திய அணுசக்தி துறை சார்பில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 50 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் இன்றி பயன்படுத்தும் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்க முடிவு செய்தது.

தமிழகத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்துள்ள புதுப்பட்டினம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது.

இந்த ஊராட்சியில் உள்ள 5 ஆயிரம் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்படும் என்று இந்திய அணுசக்தி துறை அறிவித்தது. இதையடுத்து ஐநூறு, ஆயிரம் என தவணை முறையில் வழங்குவதாக மத்திய அணுசக்தி துறை அறிவுறுத்தியது.

ஆனால், புதுபட்டினம் ஊராட்சி தலைவி காயத்ரி தனபால்,என்பகுதி மக்களுக்கு ஒரே நேரத்தில் கொடுங்கள். ஒருவருக்கு கிடைத்து ஒருவருக்கு கிடைக்காவிட்டால் பொதுமக்களிடம் ஏமாற்றமே மிஞ்சும்..என மத்திய அணுசக்தி துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். ஊராட்சி தலைவியின் கோரிக்கைக்கு பணிந்த அதிகாரிகள் ஒரே நேரத்தில் மொத்தம் 5 ஆயிரம் பயணாளிகளுக்கும் ஆர்.ஓ. வாட்டர் எந்திரம் வழங்குவதாக அறிவித்தனர்.

இதையடுத்து ஒரே நாளில் புதுப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அணுவாற்றல் குடியிருப்பு, ராஜா நகர், பல்லவன் நகர், ஊஸ்டர் நகர், மீனவர் குடியிருப்பு, பெருமாள்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் குடும்பங்களுக்கு
இலவச நவீன சுத்திகரிப்பு எந்திரங்கள் வழங்கினர.

ஊராட்சி தலைவருக்கு பொதுமக்களுக்காக மத்திய அணுசக்தி துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து தொடர்ந்து வலியுறுத்தி போராடி பெற்றுத்தந்தமைக்கு புதுப்பட்டினம் மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியினை ஜான் குமார் எம்எல்ஏ வழங்கினார்

40 லட்சம் மதிப்பிலான நிலத்தை பள்ளிக்கு வழங்கியவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு