in

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்


Watch – YouTube Click

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

 

தென்காசி மாவட்டத்தில் கொளுத்தும் வெயில் காரணமாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையங்களில் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது

தமிழகத்தின் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையல் தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் என்பது 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருவதன் காரணமாக அரசியல் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், தென்காசி மாவட்டம் அதிமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

இதில் கடையநல்லூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்களுக்கு மோர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

ராணுவத்தில் வீர மரணம் அடைந்த சாமி கண்ணன் மனைவியிடம் ராணுவ அதிகாரி பாராட்டி பரிசுகளை வழங்கினர்

காவலர்கள் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்கள்