in

மதுராந்தகத்தில் புதிய பேருந்து நிலையம கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா


Watch – YouTube Click

மதுராந்தகத்தில் புதிய பேருந்து நிலையம கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் அண்ணா பேருந்து நிலையம் 1987 ஆம் ஆண்டு 32 லட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு 1992 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

இந்தப் பேருந்து நிலையம் 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. பேருந்து நிலைய கட்டிடம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் பேருந்து நிலைய கட்டிடத்தின் மேல் தள பகுதியில் மரம், செடி கொடிகள் முளைத்து விரிசல் ஏற்பட்டது.

மேலும், பேருந்து நிலையத்தின் கட்டட உள்புறம் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து விழ தொடங்கியது. இதனால் மழைக் காலங்களில் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் மழை நீர் கசிவு ஏற்பட்டு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மழை நீரில் நனைந்து வீணாகியது.

தொடர்ந்து இந்த பேருந்து நிலைய கட்டிடம் பழுதடைந்து வந்ததால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கையை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த ஒரு ஆண்டுகளாக சென்னையில் இருந்து உயர் அதிகாரிகளும் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வு செய்து பேருந்து நிலையத்தின் மேல் பகுதி சேதம் அடைந்து உள்ளதாகவும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரையும் செய்தனர்.

இதன் அடிப்படையில் கலைஞர் நகர் புற மேம்பாடு திட்டத்தின் மூலம் ரூபாய் 2.48 கோடி மதிப்பீட்டில் 16 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையிலும், 21 கடைகளும், 2 பயணிகள் காத்திருப்பு அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை, இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய பேருந்து நிலைய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனால் இடிந்த நிலையில் இருந்த பேருந்து நிலைய கட்டிடத்தை கடந்த ஒரு மாத காலமாக பொக்லைன் இயந்திரம் மூலமாக இடித்து அகற்றினர்.

இதனை அடுத்து புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து கட்டுமான பணி தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மலர்விழிகுமார் தலைமை தாங்கினார்.

மதுராந்தகம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) விஜயகுமார், பொறியாளர் நித்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.க. சுந்தர், காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் சிவலிங்கம் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற மலை வாழ் பெண்

கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்