in

கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்


Watch – YouTube Click

கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்

 

கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.

இதில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது பிரிவு சார்ந்த இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

கபடி போட்டி, கால்பந்து போட்டி மற்றும் கையுந்து பந்து போட்டி என மூன்று போட்டிகள் நடத்தப்படுகிறது.

பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் நடைபெற்று வரும் போட்டிகளில் கபடி போட்டி ஆண்கள் பிரிவுகளில் 12 அணிகளில் 144 வீரர்களும் , பெண்கள் பிரிவில் 7 அணிகளில் 84 வீரர்களும் மொத்தம் 228 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கையுந்துப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 10 அணிகளில் 120 வீரர்களும், பெண்கள் பிரிவில் 6 அணிகளில் 72 வீரர்களும் என மொத்தம் 192 விளையாட்டு வீரர்களும்,

கால்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 8 அணிகளில் 144 வீரர்களும், பெண்கள் பிரிவில் 6 அணிகளில் 108 வீரர்களும் என மொத்தம் 252 விளையாட்டு வீரர்களும், இந்த அனைத்து போட்டிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 49 அணிகளை சேர்ந்த 672 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்

இன்று நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் அணிகளுக்கு வருகின்ற 16.02.2024 அன்று தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர்.உமாசங்கர், விளையாட்டு மைதான மல்யுத்த பயிற்சியாளர் மெய்ஞான மூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

மதுராந்தகத்தில் புதிய பேருந்து நிலையம கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

புதுவையில் இருந்து இரண்டு சொகுசு கார்களில் மது பாட்டில் கடத்தல்