in

நாகூர் தர்காவில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கைப்பை திருட்டு!

🚨 நாகூர் தர்காவில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கைப்பை திருட்டு!

நாகூர் தர்காவில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கைப்பை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

​நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

​இந்நிலையில், தர்காவின் உட்புறம் உள்ள கிழக்கு வாசல் பகுதி திண்ணையில், வெளியூரிலிருந்து வந்திருந்த பக்தர்கள் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றித் திரிந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பக்கத்தில் அமர்ந்து சூழ்நிலையை நோட்டமிட்டுள்ளார்.

​தொடர்ந்து, ஆள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்த அந்த பெண், அருகில் தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கைப் பையை மிகவும் நைசாகத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

சிதம்பரத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்!