in

நகர காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

நகர காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

 

தஞ்சை நகர காவல்துறை சார்பில் நடந்த போதை பொருள் விழிப்புணர்வு பேரணியில் நகரில் உள்ள 6 காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக அணி வகுத்து சென்றனர்.

தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியை தஞ்சை நகர காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிட்ம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்

தஞ்சை நகருக்குள் உள்ள கிழக்கு காவல்நிலையம் மேற்கு, காவல்நிலையம் தெற்கு, காவல்நிலையம் மருத்துவக்கல்லூரி காவல்நிலையம் அனைத்து மகளிர் காவல் நிலையம், மற்றும் போக்குவரத்து துறை ஆகியவற்றில் பணியாற்றி வரும் ஆண் மற்றும் பெண் காவலர்கள் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக அணி வகுத்து முக்கிய சாலைகள் வழியாக சென்று இறுதியாக தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் நிறைவு செய்தனர்.

What do you think?

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய திருத்தேரோட்டம்