in

அதிமுகவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்


Watch – YouTube Click

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனுக்காக அதிமுக பொருளாளர் ரவிபாண்டுரங்கன் தலைமையில் அதிமுகவினர் அரியாங்குப்பம் தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு கேட்டனர்.

புதுச்சேரியில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக அரியங்குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேங்காய்திட்டு பகுதி முத்துமாரியம்மன் கோவிலில் இன்று அதிமுக மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமையில் தேர்தல் நோட்டீஸ் வைத்து பூஜை செய்தனர்.

பின்னர் அதிமுக பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமையில் அதிமுகவினர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது பொதுமக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அவருடன் தொகுதி கழக செயலாளர் ராஜா, அவைதலைவர் ராஜேந்திரன், மாநில துணை செயலாளர் சேரன், வார்டு கழக செயலாளர்கள் ரமேஷ், பன்னீர்செல்வம், அப்பு, ஜெயக்குமார், பாலு, ரங்கநாதன் மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் செல்வகுமார், நட்ராஜ், ராமலிங்கம், மிஸ்டர் எக்ஸ், அன்பு, கோபி, சரவணன், நாகப்பன், மணி, ஷோக்ராஜி, கலைச் செல்வம், செல்வம், ஆறுமுகம், சிவா, வேலு, குட்டியாண்டி, ஜெயபால் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்கள்.


Watch – YouTube Click

What do you think?

வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு

அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு