in

குக் வித் கோமாளி சீசன் 5…யார் யார் போட்டியிட போகிறார்கள் ….லிஸ்ட் இதோ

குக் வித் கோமாளி சீசன் 5…யார் யார் போட்டியிட போகிறார்கள் ….லிஸ்ட் இதோ

குக் வித் கோமாளி சீசன் 4 முடிந்து பல மாதங்கள் ஆன பொழுது அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்ற ஆவலில் இருந்த ரசிகர்களுக்கு விஜய் டிவி தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்காததால் மீண்டும் நடைபெறுமா அல்லது நிறுத்தப்படுமா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்ட நிலையில் திடீரென்று அடுத்த சீசனில் நான் பங்கேற்கவில்லை என்று வெங்கடேஸ் பட் குண்டை போட்டார், அடுத்த ட்விஸ்ட்… டாக தன்னோடு செஃப் தாமுவும் வெளியேறுகிறார் என்று கூறியிருந்தார்.

பிறகு அந்த வீடியோவை டெலிட் செய்து, பிறகு. வார்த்தைகள் மாறினாலும் நண்பனின் நட்பு மாறாது என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தார். இந்நிலையில் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜனை நடுவராக களம் இருக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளது.

சமீப காலமாக பல பிரபலங்களின் நிகழ்ச்சிகளில் மாதம் பட்டி ரங்கராஜனின் சமையல் தான் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) சமையல் கலைஞர் மற்றும் நடிகர்.

இவர் தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி. இந்நிறுவனம் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உணவுத் தொடர்பான சேவையைச் செய்கிறது.

சரி நாம மேட்டர்…ருக்கு வருவோம். மாதம்பட்டி ரங்கராஜன், செப் தாமு இருவரும் விமானத்திலிருந்து இறங்கி வருவது போல குக்வித்து கோமாளி 5 ப்ரோமோ விஜய் டிவி நேற்று வெளியிட்டது.

ப்ரோமோவை தொடர்ந்து யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளபோகிறார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் …இன்ப அதிர்ச்சியாக யு டுபேர்(Youtuber) இர்பான், நடிகர் டிவி கணேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா போன்றோர் வரஇருகின்றனர்.

இவர்களுடன் ஹீரோயின்கலை கண்டிப்பாக இறக்க வேண்டும் என்று நடிகை திவ்யா துரைசாமி இடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றதாம்.

What do you think?

விழந்த சமந்தாவை பார்த்து தெறித்து ஓடிய இயக்குனர்

பவானி அமீர் திருமணம் விரைவில்… அமீரையும் திருமணம் செய்து கொன்று விடுவிர்களா?…