in

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழன் சதய விழா

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழன் சதய விழா

 

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்ட நாட்டியத்தை கொட்டும் மழையில் கண்டு ரசித்த பொதுமக்கள்.

மாமன்னன் ராஜராஜன் சோழனின் 1041 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் இரண்டு நாட்கள் விழா மிக விமர்சியாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழை போற்றும் வகையில் 1041 நாட்டிய மங்கைகள் பங்கேற்ற சோழ கலைச் சங்கமம் ஆனா,‘இராசராசேச்சரம்’. நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாமன்னர் ராஜராஜ சோழனின் வரலாற்றுப் பெருமையையும், தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலின் ஒப்பற்ற சிறப்பையும், தமிழர்களின் தொன்மையான கலை மற்றும் பண்பாட்டு மரபுகளையும் ஒருங்கிணைக்கும் மாபெரும் கலை முயற்சியாக, ‘இராசராசேச்சரம்’ சோழ கலைச் சங்கமம், அரங்கேறுகிறது.

நிகழ்ச்சியில் வரலாறு, கலை, இறைபக்தி மற்றும் நவீனத் தொழில்நுட்பம் ஆகிய நான்கும் ஒரே மேடையில் சங்கமிக்கும் இம்முயற்சி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக சென்னை, பெரம்பலூர், சேலம், ஓசூர், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, பெங்களூரு மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து கலைஞர்களும் கலை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

What do you think?

அரசு கொலைஞ்சியப்பர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

இராஜராஜ சோழன் லோகமா தேவி நகர்வலம்