பெருவுடையாரிடம் நேரடியாக முறையிட்ட வைகோ
தஞ்சை பெரிய கோவிலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வைகோ, பெருவுடையாரிடம் நேரடியாக முறையிட்டார்.
பெரிய கோவில் கருவறை முன்பு நின்று, கைகூப்பி, கண்கள் மூடி, உணர்ச்சிபூர்வமாக பெருவுடையாரிடம் அவர் வேண்டினார்.
காவிரி பிரச்சனையை உன்னிடம் முறையிடுகிறேன் காவிரி ஆற்றிற்கு பேராபத்து வந்திருக்கிறது.
கர்நாடக அரசு சர்வதேச சட்டங்களை மீறி காவிரியின் குறுக்கே நான்கு அணைகளை கட்டி விட்டது. தற்போது ஐந்தாவதாக புதிய அணை கட்ட முயற்சி செய்கிறது.

புதிதாக அணை கட்டினால், மன்னர் ஆட்சி போல் அந்த அணையை நாங்கள் படையெடுத்து சென்று உடைக்க முடியாது.
கர்நாடகாவில் மத்திய அரசு கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக, நயவஞ்சகமாக மறைமுகமாக ஆதரவளித்து அணையை கட்ட ஆதரவளிக்கிறது.
அப்படி அணை கட்டினால், வருங்காலத்தில் டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறும்.
டெல்டா தனி பிரதேசமாக விளங்க, உன் மீது ஆணையாக உன்னிடம் விண்ணப்பிக்கிறேன் என்று பெருவுடையாரிடம் முறையிட்டார் வைகோ.


