in

சிவபுராணம் பாடி பெருவுடையாரை வழிபட்டார் வைகோ

சிவபுராணம் பாடி பெருவுடையாரை வழிபட்டார் வைகோ

 

தஞ்சை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெரிய கோவிலுக்கு சென்று மூலவர் சன்னதி முன்பு நின்று அர்ச்சகரிடம் தேவாரம் திருவாசகம் தெரியாதா என கேட்டுவிட்டு.

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என சிவபுராணம் பாடி பெருவுடையாரை வழிபட்டார்.

நாத்திகம் பேசும் வை.கோ கோவில் கருவறை வரை சென்று பெருவுடையார் சன்னதி முன்பு மண்டியிட்டு வழிப்பாடு செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர மறுத்து, மேகதாது குறிக்கே அணைக்கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடக அரசையும் அதற்கு துணை போகும் மத்திய அரசையும் கண்டித்தும் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்னதாக தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தார்.

பெரியக் கோவில் கருவறைக்கு செல்ல தயங்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் நாத்திகம் பேசி வரும் வைகோ பெருவுடையார் மூலவர் சன்னதி முன்பு மண்டியிட்டு வணங்கி வழிபட்டார்.

சிவாச்சாரியாரிடம் தேவாரம் திருவாசகம் தெரியாதா என கேட்டு விட்டு

நமச்சிவாய வாழ்க

நாதன் தாள் வாழ்க

இமைப் பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குரு மனிதன் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

சிவாச்சாரியார் தமிழில்

என் நாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

என தமிழில் அர்ச்சனை செய்து தீபாரதனை காட்டினார்.

சிவாச்சாரியார் காட்டிய ஆரத்தி தட்டினை தொட்டு வணங்கி கண்களில் ஒற்றிக் கொண்டு வழிபட்டார்.

வைகோவின் இந்த செயல் அனைவரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

கர்நாடகா அரசை கண்டித்து வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெருவுடையாரிடம் நேரடியாக முறையிட்ட வைகோ