கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி
காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து திருக்காட்டுப்பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணி சென்றனர்.
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா அரசு தர மறுப்பதால் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான சம்பா பயிர்கள் காய்ந்து கருகி வரும் நிலையில்

தமிழக அரசு கள்ள மெளனம் காத்து காவிரியில் தமிழகத்தின் உரிமையை இழக்கக் கூடாது என்றும்
கர்நாடகா அரசை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் வில்லத்தனமாக ஒன்றிய அரசு செயல்படுவதால் ஒன்றிய அரசை கண்டித்தும்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் 1,500 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கண்டன பேரணி நடைபெற்றது.

இது குறித்து பேட்டி அளித்த காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கர்நாடகா அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது அதற்கு வில்லத்தனமாக ஒன்றிய அரசும் துணைபோகிறது என்பதால் இன்று கர்நாடகா அரசை கண்டித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் கள்ள மெளனம் காக்கும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன பேரணி நடைபெற்றது.
அடுத்தகட்டமாக காவிரி உரிமையை மீட்டெடுக்க அனைத்து கட்சிகளும், விவசாயிகள் சங்கமும், வணிகர் சங்கங்களும் இணைந்து தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்திட வேண்டும் என்றார்.


