in

சாய்ந்து கிடக்கும் காவல்துறை கூடாரம்

சாய்ந்து கிடக்கும் காவல்துறை கூடாரம்

 

கார்த்திகை தீபத் திருவிழாவின் போது காவல்துறைக்காக போடப்பட்ட கூடாரம் சாய்ந்து கிடக்கும் அவலம்….

விபத்து ஏற்படும் முன்னர் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 24ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருக்கார்த்திகை தீப திருவிழாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து மகா தீப தரிசனத்தை பார்த்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக காவல் துறையினர் ஒவ்வொரு பகுதியாக குழுக்களாக பிரிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஒவ்வொரு பகுதியிலும் காவல் துறையினருக்காக பிரத்தியேகமாக கூடாரம் அமைக்கப்பட்டது.

அண்ணாமலையார் கோவிலின் பே கோபுர வாசலில் காவல் துறைக்காக கூடாரம் அமைக்கப்பட்டது. தீபத் திருவிழா முடிந்து இரண்டு தினங்களை கடந்தும் அந்த கூடாரம் அகற்றப்படாததால் இன்று முழுவதுமாக சாலையிலேயே சாய்ந்துள்ளது. கூடாரத்தை அகற்றாமல் சாய்ந்து கிடக்கும் கூடாரத்திற்கு இரும்பு தடுப்புகளை கொண்டு முட்டு கொடுத்துள்ளனர்.

விபத்து ஏற்படும் முன்னர் உடனடியாக அந்த கூடாரத்தை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

ஜோதிப்பிழம்பாக காட்சியளிக்கும் அண்ணாமலையார் தரிசனம்

கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி