in

ஐபிஎல் தொடரில் இன்றைய 51 வது போட்டியில் குஜராத் பெங்களூர் இன்று மோதல் 


Watch – YouTube Click

ஐபிஎல் தொடரில் இன்றைய 51 வது போட்டியில் குஜராத் பெங்களூர் இன்று மோதல் 

இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

பெங்களூரு அணி இந்த ஐபிஎல் தொடரிலிருந்து கிட்டத்தட்ட வெளியேறிய நிலையில், ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்பில் தற்போது விளையாடி வருகிறது. இந்நிலையில் குஜராத் அணிக்கான எஞ்சி இருக்கும் ப்ளே ஆஃப் வாய்ப்பை பெங்களூரு அணி வெற்றி பெற்று பறிக்குமா என்பதை நாம் பொருத்து இருந்தே பார்க்க வேண்டும்.

இந்த தொடரில் இந்த இரு அணிகளும் கடைசியாக போட்டி இட்ட பொழுது 16 ஓவர்களிலேயே 201 ரன்களை எட்டி அபாரமாக வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலை மீண்டும் தொடர்ந்தால் குஜராத் அணியின் பிளே ஆஃப் கனவு நொறுங்கி விடும் என்பது உறுதி.

இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் மொத்தமாக 4 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்த 2 போட்டிகள் குஜராத் அணியும், 2 போட்டியில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் முன்னரே ஒரு தோல்வியை சந்தித்த குஜராத் அணி திருப்பி கொடுக்குமா என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.


Watch – YouTube Click

What do you think?

செங்கழுநீர் அம்மன் இந்திர விமானத்தில் வீதி உலா, 200 நடன கலைஞர்கள் பக்தி நடனம்

ஆயுதங்களுடன் நான்கு நபர்கள் கைது கியூ பிரிவு, காவல் துறையினர் விசாரணை