ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
நாகையில் முடங்கிய தூய்மை பணி: தூய்மை பணிகளில் தனியார் மயத்தை கைவிட வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலை முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
நகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம்
நாகப்பட்டினம் நகராட்சியில் தூய்மை பணிகளை தனியார் மயத்தை கைவிடல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலை முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலி 600ம் ஓட்டுநர்களுக்கு 740 ரூபாயும் வழங்க வேண்டும், ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
அத்தியாவசியமான துப்புரவு பணியை தனியார்மயத்தை கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

முன்னாள் எம்எல்ஏ நாகை மாலி தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ள அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் நகராட்சி பகுதி முழுவதும் தூய்மை பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .