in

ஓசூர் பிரம்ம மலையில் நள்ளிரவில் ஸ்ரீ சுடலைமாடசாமிக்கு சிறப்பு பூஜை

ஓசூர் பிரம்ம மலையில் நள்ளிரவில் ஸ்ரீ சுடலைமாடசாமிக்கு சிறப்பு பூஜை

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிரம்ம மலையில் அமைந்துள்ள இந்திராக்ஷி பீடத்தில் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வரும் ஸ்ரீ சுடலைமாடசாமிக்கு நவமி திதியை முன்னிட்டு நள்ளிரவு நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, சுவாமிக்கு உகந்த பொருட்களான அசைவ உணவுகள், சுருட்டு, மதுபானங்கள் உள்ளிட்ட பல்வேறு காணிக்கைப் பொருட்களை பக்தர்கள் கொண்டு வந்தனர்.

 

அவை சுவாமியின் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த சிறப்பு பூஜையில் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுடலைமாடசாமியை வழிபட்டு, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டி பிரார்த்தனை, செய்தனர்,

What do you think?

ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா

வள்ளலாரின் 203-வது அவதார திருநாள் விழா