in

தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தருமபுரம் குரு மகா சன்னிதானத்திடம் நேரில் ஆசி பெற்றனர்


Watch – YouTube Click

தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தருமபுரம் குரு மகா சன்னிதானத்திடம் நேரில் ஆசி பெற்றனர்

 

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தருமபுரம் குரு மகா சன்னிதானத்திடம் நேரில் ஆசி பெற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீ முத்தையா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், மாவட்ட அளவில் ரவிச்சந்திரிகா என்ற மாணவி அதிக மதிப்பெண் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

மேலும் இரண்டு பள்ளிகளிலும் முதல் மூன்று மதிப்பெண்கள் பிடித்த மாணவ மாணவிகள், இன்று தருமபுரம் ஆதீனத்தில் ஆதின குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

அவர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசியும் நினைவுப் பரிசும் வழங்கினார். நிகழ்ச்சியின் போது பள்ளியின் நிர்வாக செயலர் வி பாஸ்கரன் பள்ளி முதல்வர்கள் ஆர் சரவணன், ஜெகதீஸ்குமார், பொறுப்பாசிரியர் ராஜலிங்கம் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்கள் கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

கஸ்டமர் கேர் வேலை கேட்ட இளைஞர் – சிரித்து கொண்டே பதிலளித்த பெண் அதிகாரி

லஞ்சம் பெற்ற தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுநர் கைது