in

கஸ்டமர் கேர் வேலை கேட்ட இளைஞர் – சிரித்து கொண்டே பதிலளித்த பெண் அதிகாரி


Watch – YouTube Click

கஸ்டமர் கேர் வேலை கேட்ட இளைஞர் – சிரித்து கொண்டே பதிலளித்த பெண் அதிகாரி

 

கிரெடிட் கார்டு வேணுமா என்று கேட்ட வாடிக்கையாளர் சேவை மைய பெண் ஊழியரிடம் ஏசி அறையில் கஸ்டமர் கேர் வேலை கேட்ட இளைஞர் – சிரித்து கொண்டே பதிலளித்த பெண் அதிகாரி – சம்பாதிக்கிறது கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கிறதுக்கே செலவாகிடுது என பேசிய இளைஞர்

வங்கி சார்பில் கிரெடிட் கார்டு தொடர்பாக இளைஞர் ஒருவருக்கு தொலைபேசியில் வாடிக்கையாளர் சேவை மைய பெண் அதிகாரி ஒருவர் பேச எதிர்முனையில் பேசிய இளைஞர் வெயில் அடிப்பதால் நான் வேலைக்கு போகவே இல்லை என கூறியனார். அப்போது பதிலளித்த பெண் வேலைக்கு போகும் வேறுயாராவது நண்பர்கள் இருந்தால் சொல்லவும் என கூறியவுடன்

எங்க குருப்பில் நான் ஒருவன் தான் வேலைக்கு போனேன் ஆனால் இப்போது வேலை இல்லை, உங்களை போல ஏசி அறையில் வேலை இருந்தால் சொல்லுங்கள் என இளைஞர் கூறினார்

உங்களை போல வேலை வேண்டும் என்ன படிக்கனும் நானும் டிகிரி படித்து முடித்துள்ளேன் என கூற டிகிரியே போதும் சார் என பெண் அதிகாரி பதில் கூறினார்.
அதற்கு பதிலளித்த பெண் அதிகாரி நான் கிரெடிட் கார்டு தொடர்பா? கேட்டால் நீங்கள் என்னிடம் வேலை கேட்கிறீர்கள் என சிரித்துகொண்டே பதிலளித்தார்.

தற்போது அடிக்கும் வெயிலுக்கு சம்பாதிக்கும் பணம் கூல்ட்ரிங்க்ஸ் குடிப்பதிலயே போய்விடுகிறது. அதனால் வேலைக்கு செல்லாமல் மரத்தடியில் நிற்கிறேன் என்றார்.

இதனையடுத்து எதிர்முனையில் பேசிய பெண் அதிகாரி பேச உங்களது பெயரை காப்பாற்றுவது போல வேலை பார்ப்பேன் என பதிலளிக்க சிரித்துகொண்டே போனை துண்டித்தார்.

இது தொடர்பான ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் புதுச்சேரி அமைச்சர் பி ஆர் என்‌ திருமுருகன் பங்கேற்பு

தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தருமபுரம் குரு மகா சன்னிதானத்திடம் நேரில் ஆசி பெற்றனர்