தீபாவளி தொகுப்பு: முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.700 மதிப்பிலான தீபாவளி தொகுப்பு: முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.700 மதிப்பிலான சிறப்பு மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
இந்த சிறப்புத் தொகுப்பில் 2 லிட்டர் சமையல் எண்ணெய், 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலைப்பருப்பு, 500 கிராம் ரவை மற்றும் 500 கிராம் மைதா என ஐந்து வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரத்து 793 குடும்ப அட்டைதாரர்கள் இந்த சிறப்புத் தொகுப்பின் மூலம் பயன்பெற உள்ளனர்.
இதற்கான பொருட்கள் CONFED நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, நியாயவிலைக் கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.700 மதிப்பிலான சிறப்பு மளிகைப் பொருட்கள் தொகுப்பு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், தீபாவளிக்குள் தொகுப்பை பெற்றுக்கொள்ள முடியாத குடும்ப அட்டைதாரர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும், தீபாவளி முடிந்த பின்னரும் தங்களுக்குரிய தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசின் சார்பில் ரூ.700 மதிப்பிலான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

