in

புதுச்சேரியில் தொடர் மின்தடை – மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.

புதுச்சேரியில் தொடர் மின்தடை – மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.

 

புதுச்சேரியில் தொடர் மின்தடை – மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேரு எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடைபெற்றது…

புதுச்சேரியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி ஏற்படும் மின்தடையைக் கண்டித்து, உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நேயம் மக்கள் கழகத் தலைவருமான நேரு (எ) குப்புசாமி தலைமையில் மின்துறை தலைமை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து முன்னறிவிப்பின்றி மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, வெங்கடா நகர் துணை மின் நிலையத்தில் உள்ள மின்கட்டமைப்புகள் மிகவும் பழமையானதாக இருப்பதால், தற்போதைய புதுச்சேரியின் மின்தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் வளர்ந்து வரும் புதுச்சேரியின் மின்தேவைக்கு ஏற்ப மின்கட்டமைப்புகளை நவீனப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்றும், உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனை வலியுறுத்தி, இன்று உப்பளம் மின்துறை தலைமை அலுவலக வாயில் பகுதியில் நேரு (எ) குப்புசாமி எம்.எல்.ஏ. தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்கள், மின்தடையால் பொதுமக்கள் சந்தித்து வரும் பாதிப்புகளை எடுத்துரைத்து, மின்துறை அதிகாரிகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் நேரு மின்துறை தலைமை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மின்துறையில் நிலவும் உள்கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர், மின்துறை அமைச்சர் மற்றும் துறைச் செயலரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

What do you think?

மகளிர்களுக்கான இலவச புற்றுநோய் முகாம்