in

மகளிர்களுக்கான இலவச புற்றுநோய் முகாம்

மகளிர்களுக்கான இலவச புற்றுநோய் முகாம்

 

திருவாவடுதுறை ஆதீன தலைமை மடத்தில் கும்பகோணம் கிராண்ட் ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி சார்பில் மகளிர்களுக்கான இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம் நடந்தது.

கும்பகோணம் கிராண்ட் ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி சார்பில் திருவாவடுதுறை ஆதீன தலைமை மடத்தில் மகளிர்களுக்கான இலவச புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.

திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் இந்த முகாமை தொடங்கி வைத்து அருள் ஆசி வழங்கினார்.

தொடர்ந்து ஆதீன தலைமை மடத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்களுக்கு இலவசமாக புற்றுநோய் கண்டறியும் வகையில் அதிநவீன கருவிகளைக் கொண்டு மருத்துவ பரிசோதனைகள் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் தொழிலதிபர் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கும்பகோணம் கிராண்ட் ரோட்டரி சங்க தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் பூமா, கணேஷ், செந்தில்குமரன், நடராஜன், ஹரிபாலன், திருவாவடுதுறை ஆதீன தென்மண்டல மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன், ஆதீன பொது மேலாளர் மனவழகன், ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலர் விஷ்ணு ராம் நன்றி கூறினார்.

What do you think?

மாயூரநாதர் ஆலயத்தில் விநாயகர் கொடியேற்றம்

புதுச்சேரியில் தொடர் மின்தடை – மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.