in

நவ நரசிம்மர் திருக்கோவில் – கருங்கல் தூண்கள் பிரதிஷ்டை யாக பூஜை

நவ நரசிம்மர் திருக்கோவில் – கருங்கல் தூண்கள் பிரதிஷ்டை யாக பூஜை

 

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் நவ நரசிம்மர் திருக்கோவில் – கருங்கல் தூண்கள் பிரதிஷ்டைக்கான யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது…

புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் பகுதியில், ஸ்ரீ ஹயக்ரீவர் சன்னதி அருகே நவ நரசிம்மர் திருக்கோவில் அமைக்கும் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆந்திர மாநிலம் அகோபிலத்தில் நவ நரசிம்மர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போன்று, புதுச்சேரியில் நவ நரசிம்மருடன் பானக நரசிம்மரையும் இணைத்து, நவ நரசிம்மர் திருக்கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த திருக்கோவிலின் கருவறை நுழைவுவாயிலில், நரசிம்மர் தூணிலிருந்து அவதரித்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், கருங்கல்லால் இரண்டு சபா ஸ்தம்பங்கள் அமைக்கப்படுகின்றன.

இதற்கான நிர்மாண யாக பூஜைகள், லட்சுமி நரசிம்மர் பஞ்சமியும், மிருகசீரிஷ நட்சத்திரமும் இணைந்த நன்னாளில் சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து இரண்டு கருங்கல் தூண்களும் ஸ்தாபிதம் செய்யப்பட்டன.

 

மேலும், இத்திருக்கோவிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், விமானம், ராஜகோபுரம் மற்றும் த்வஜஸ்தம்பம் உள்ளிட்ட திருப்பணிகள் அனைத்தும் கருங்கல்லால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், மூலவரான நரசிம்மருக்குப் பின்புறம் ஸ்ரீ ராமர், ஆஞ்சநேயர், சுதர்சன ஆழ்வார் சன்னதிகளும், திருமுன்பாக வேதாந்த தேசிகர் சன்னதியும் அமைக்கப்பட உள்ளன. பக்தர்களின் வசதிக்காக திருக்குளமும் அமைக்கப்படவுள்ளது.

இந்த மாபெரும் திருப்பணிகள் அனைத்தும் பக்தர்களின் ஆதரவுடனும், நன்கொடைகளுடனும் நடைபெற்று வருகின்றன.

எனவே, பக்தர்கள் தங்களால் இயன்ற அளவில் தங்கம், வெள்ளி மற்றும் பொருளுதவிகளை வழங்கி, இந்த அரிய திருப்பணியில் பங்கேற்று நரசிம்மரின் திருவருளைப் பெறுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பராபவ வருடத்தில் தொடங்கப்பட்டுள்ள திருப்பணிகளை, அடுத்த ஆண்டிற்குள் நிறைவு செய்து மகா சம்ப்ரோக்ஷணம் நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பக்தர்களின் பங்களிப்புடன் புதுச்சேரியில் உருவாகி வரும் நவ நரசிம்மர் திருக்கோவில், ஆன்மிகப் பக்தர்களின் வழிபாட்டுத் தலமாக அமைய உள்ளது.

நிகழ்ச்சிகள் ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீஉவே.ராமபத்திர தாத்தாச்சாரியார் மற்றும் சம்பத்குமார் பட்டாச்சாரியார் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்…

What do you think?

ஸ்ரீமுஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்! பத்திரத்தை வழங்க மறுப்பதாகப் புகார்!

ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் சங்கட சதுர்த்தி சிறப்பு வழிபாடு!