in

புதுச்சேரியில் மழைநீர் வடியாததால் மக்கள் அவதி! வீட்டுக்குள் மீன், பூரான், எலி புகுவதால் அச்சம்!

புதுச்சேரியில் மழைநீர் வடியாததால் மக்கள் அவதி! வீட்டுக்குள் மீன், பூரான், எலி புகுவதால் அச்சம்!

முதலமைச்சர் ரங்கசாமி வெற்றி பெற்ற மங்களம் தொகுதியின் ஆரியபாளையம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது.தொடர் மழை காரணமாக இந்தப் பகுதி முழுவதும் மழை நீரால் சூழ்ந்தது.மழை நின்று ஒரு நாட்கள் ஆகிய நிலையிலும் ஒரு நாட்கள் கடந்த நிலையிலும் இந்த பகுதியில் இன்னும் மழை நீர் வடியவில்லை காரணம் இப்பகுதியில் உள்ள வாய்க்காலில் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது .

 

இதனால் மழைநீர் வெளியேறாமல் வீடுகளை சூழ்ந்துள்ளது. தேங்கியுள்ள மழை நீரில் மீன், பூரான், பெருச்சாளி போன்றவை வீட்டுக்குள் நுழைகின்றன. இதனால் நோய் பரவும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். முதலமைச்சர் தொகுதிக்கே இந்த நிலையா..? என்ற கேள்வியை எழுப்பு மக்கள் ஜந்துக்கள் மத்தியில் பயத்துடன் வாழ்வதாக கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்….
ஒவ்வொரு மழைக்கும் ஆரியபாளையம் கிராமம் இதே போன்ற பாதிப்புக்கு உள்ளாகுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்..

What do you think?

தேக்கம்பட்டி சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம்: ஆண்டிப்பட்டியில் ட்ரோன் மூலம் போலீசார் தீவிர தேடுதல்! 

புதுச்சேரியில் தொடர் மழை: நிரம்பும் நீர்நிலைகள்; உடைந்த படுகை அணையால் கடலில் வீணாகும் தண்ணீர்!