in

ஒட்டன்சத்திரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்! சிசிடிவி காட்சி வெளியீடு 

ஒட்டன்சத்திரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்! சிசிடிவி காட்சி வெளியீடு 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செம்பட்டி சாலை ரெட்டை வேப்பமரம் பகுதியில் முத்துராஜ் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் அருந்திவிட்டு குள்ளம்பட்டியை சேர்ந்த ஓட்டுநர் சபரி மற்றும் ஸ்ரீராமாபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய இருவரும் பெட்ரோல் பங்க் வந்து பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தர மறுத்துள்ளனர். இதனால் பங்க் ஊழியர்களுக்கும் மது போதையில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் பங்க் ஊழியர்கள் பாண்டி, தங்கம், குமார் ஆகிய மூன்று பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டியும் சரமாரியாக தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பங்க் ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது

What do you think?

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் பேரணி.

மயிலம் ஸ்ரீ முருகன் கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு!