in

மகாத்மா காந்தி நினைவு தினம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை


Watch – YouTube Click

மகாத்மா காந்தி நினைவு தினம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை 

 

புதுச்சேரி…நிதீஷ் குமாருக்கு எட்டப்பன் என பெயர் வைக்கலாம்…நிதிஷ்குமாருக்கு அண்ணன் தான் முதல்வர் ரங்கசாமி.காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி பேச்சு…

மகாத்மா காந்தி நினைவு தினம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் கட்சி தலைவர் வைத்தியலிங்கம் எம்பி தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய வைத்தியலிங்கம் எம்பி, தென்னிந்தியாவில் இருக்க கூடிய அனைத்து மக்களும் அவர்களது சக்திக்கு எதிராக இருக்க கூடியவர்கள். எவ்வளவோ மாற்ற முயற்சித்தும் முடியவில்லை.

காந்தியடிகளுக்கு சமமாக உரிமைக்காக போராட கூடிய ஒரே தலைவர் ராகுல்காந்திதான்.

கட்சி மாறுவதற்கு பெயர் போன ஊர் என்று எப்போதும் சொல்வது புதுச்சேரியை தான். ஆனால் தற்போது அது பீகார் பக்கம் சென்றுவிட்டது. நிதிஷ்குமார் மணிக்கு மணி மாறாக கூடியவர். நல்ல வேலை இப்பவே சென்றுவிட்டார்.

பச்சோந்தியாக, எட்டப்பனாக உள்ளவர் நிதிஷ்குமார். எட்டப்பன் பெயரை எடுத்துவிட்டு நிதிஷ்குமார் பெயரை சேர்த்துவிடலாம் என கூறினார்.

அதிமுக உண்மையில் பாஜகவையும், ரங்கசாமியையும் எதிர்க்கிறார்களா? அல்லது பி டீமாக செயல்படுகிறார்களா..? என தெரியவில்லை.
நீங்க பி டீமா இல்லையா என சொல்லுங்க. டம்மியாக ஒருத்தரை நிறுத்திவிட்டு நாங்களும் நின்றுவிட்டோம் என அதிமுக கூற கூடாது.

அதிமுக போடும் ஓட்டு என்.ஆர்.காங்கிரசுக்கு மறைமுகமாக போடும் ஓட்டு என கூறிய வைத்திலிங்கம், நிதிஷ்குமாருக்கு அண்ணன் தான் ரங்கசாமி. நிதிஷ்குமார் எப்படி நாற்காலியை பிடித்து தொங்குகிறாரோ. அதை போல பதவி போய்விடாமல் இருக்க மோசமாய் தொங்குகிறார் ரங்கசாமி என்றும் காங்கிரஸ் தலைவர் விமர்சித்தார்.

அதிமுகவினர் இந்தியா கூட்டணி உடைந்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் அண்ணாதிமுக தான் இன்றைய தினம் சிதறி விட்டது. கொடி, சின்னம், யார் தலைமை என்பதில் சண்டை போட்டுகொண்டு உள்ளனர் என்ற வைத்திலிங்கம்,
சபாநாயகர் செல்வம் 110 முறை டெல்லிக்கு சென்று வந்துள்ளார் சட்டப்பேரவை கட்டிடத்திற்கு ஒரு ப்ரோப்பசல் கூட அனுப்பவில்லை என்றும்
பாஜக ராமரை வைத்து ஓட்டு வாங்க நினைக்கின்றனர்.

இது ராமருக்கு நடந்த விழா இல்லை. ராமருக்கு போட்டியாக மோடி நடத்தின விழா. ராமர் பாவம் அவரை விட்டுவிடுங்கள். நல்ல கடவுள் என்றும் அயோத்தியில் இருக்க கூடிய ராமர் மோடியா? பலராமரா? ஒரு மாயையை மோடி நடத்துகிறார் என்றும் வைத்திலிங்கம் எம்பி விமர்சித்தார்.


Watch – YouTube Click

What do you think?

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம்

குடிநீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஆதாரமாக திமுகவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உண்ணாவிரத போராட்டம்