in

தாதா சாகேப் பால்கே விருதை பெற தகுதியற்ற படம்…

தாதா சாகேப் பால்கே விருதை பெற தகுதியற்ற படம்…

 

தாதா சாகேப் பால்கே விருதை பெற தகுதியற்ற படம்… வலுக்கும் கண்டனம்
ரன்விர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியாகி ஆயிரம் கோடியை வசூல் செய்து சர்ச்சையில் சிக்கிய படம்அனிமல்’.

இந்த படத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள், பெண்களுக்கு எதிரான காட்சிகள், ஆணாதிக்க சிந்தனைகள் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் ராஸ்மிகா மந்தனா எல்லை மீறி நடித்திருப்பதாகவும் பல சர்ச்சைகள் எழுந்தது.

இந்தி பாடல் ஆசிரியரான ஜாவேத் அக்தரும் இப்படத்திற்கு எதிராக விமர்சனம் செய்தார். அதேபோல் நடிகை ராதிகா, பாடகர் ஸ்ரீநிவாஸ் மற்றும் எராளமான திரை பிரபலங்களும் அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் அனிமல் படத்தின் இயக்குனர் ஆன சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு தாதா சாகேப் பால்கே விருதை நேற்று மும்பையில் நடைபெற்ற ‘சிறந்த டைரக்டருக்கான விருதை அனிமல்’ படத்திற்காக கொடுக்கப்பட்டது.

இப்படம் விருதை பெற தகுதியற்றது என்று பல விமர்சனங்களும் கண்டனங்களும் வலுக்கிறது, மேலும் சந்தீப் ரெட்டி வாங்கா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

What do you think?

விவசாயிகள் மோடிக்கு உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும்… ஆடுகளம் கிஷோர்

திக் திக் மனதுடன் ரசிகர்கள்.. பேய் தனமாக இருக்க போகுது அஞ்சலியின் ஆடியோ லாஞ்ச்