in

சுயேட்சையாக போட்டியில் குதித்த த.வெ.க தொண்டர்


Watch – YouTube Click

திண்டுக்கல்லில் சுயேட்சையாக போட்டியில் குதித்த த.வெ.க தொண்டர் நடிகர் விஜய் பாராளுமன்றத் தேர்தலில் ஒதுங்கிய நிலையில் தொண்டர் விஜய் படத்தை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்

திண்டுக்கல் செய்தி நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் சார்பில் திண்டுக்கல் வேட்பாளர் அன்பு ரோஸ் அறிவிப்பு விஜய் ரசிகர்கள் ஆதரவோடு வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகத்திற்கு முதல் வெற்றியை திண்டுக்கலில் பதிவு செய்ய உள்ளதாக வேட்பாளர் பேட்டி

தமிழ்நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்காக தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வேட்பாளருக்கான சின்னம் ஒதுக்கீடு நிகழ்ச்சிக்கு வருகை தந்த திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாக தெரிவித்திருந்த அன்பு ரோஸ் என்ற சுயேட்சை வேட்பாளர் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கூட்டணி என்று விஜய் படத்துடன் அச்சிடப்பட்ட பனியனுடன் கலந்து கொண்டார் அவருக்கு ஆட்டோ சின்னம் சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது குறித்து வேட்பாளர் அன்பு ரோஸ் கூறும்போது நடிகர் விஜயின் தீவிர ரசிகன் அவர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்

அதனால் அடிப்படை உறுப்பினராக உள்ளேன் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் சுயேட்சியாக போட்டியிடுகிறேன் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது அதிமுக முதல் முதலில் திண்டுக்கலில் வெற்றியை பதிவு செய்தது போல தமிழக வெற்றி கழகத்தின் முதல் வெற்றியை திண்டுக்கல்லில் பதிவு செய்ய உள்ளேன் எதற்காக தமிழக வெற்றி கழகத்தில் அனுமதி ஏதும் எனக்குத் தரவில்லை என்று நினைக்கிறேன் நடிகர் விஜய் யாரையும் தேர்தலில் நிற்க கூடாது என்று சொல்லவில்லை நான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட நடிகர் விஜய் ஆதரவு தெரிவிப்பார் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை அவர் ஒரு குரல் கொடுத்தால் மட்டும் போதும் நிச்சயமாக முதல் வெற்றி திண்டுக்கலில் தமிழக வெற்றி கூட்டணி பதிவு செய்யும் என்று தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

போதை பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் அமீருக்கு சம்மன்

டீ கடையில் தேநீர் அருந்திய படி விஜய பிரபாகரன் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்