in

நம்ம சாமியார் ரங்கசாமிக்கு குடிதண்ணீர் பற்றி தெரியாது சாராயத்தை பற்றி மட்டுமே தெரியும்


Watch – YouTube Click

நம்ம சாமியார் ரங்கசாமிக்கு குடிதண்ணீர் பற்றி தெரியாது சாராயத்தை பற்றி மட்டுமே தெரியும்

 

நம்ம சாமியார் ரங்கசாமிக்கு குடிதண்ணீர் பற்றி தெரியாது சாராயத்தை பற்றி மட்டுமே தெரியும்,காங்கிரஸ் பிரச்சாரத்தில் வேட்பாளர் வைத்தியலிங்கம் கடும் விமர்சனம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய லிஸ்ட் போட்டு பெயர் எழுதியதால் பரபரப்பு

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் காலாப்பட்டு தொகுதி கிழக்கு கடற்கரை சாலை சாமிப்பிள்ளை தோட்டத்தில் இன்று மாலை பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்…

கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் அனைத்து பெருளும் விலை ஏறிவிட்டது. மோடியும் வேலை வழங்கவில்லை புதுச்சேரியில் ரங்கசாமியும் வேலைவாய்ப்பு வழங்கவில்லை ஆனால் ராகுல் காந்தி பிரதமராக வந்தால் இரண்டே மாதத்தில் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக உறுதி அளித்துள்ளார் என்றார்.

காங்கிரஸ் வெற்றி பெற்றால் ரூ.500-க்கு சிலிண்டர் கொடுப்போம். வேலைக்கு செல்லாத பெண் குடும்ப தலைவிக்கு மாதத்திற்கு ரூ.8,500-ம் வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் உரிமை தொகையாக வழங்க உள்ளோம். இது ராகுல்காந்தி உத்தரவு அவர் சொன்னதை செய்து முடிப்பார் என்று வைத்திலிங்கம் குறிப்பிட்டார்.

வைத்திலிங்கம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சுத்தமான குடி தண்ணீர் இங்கு இல்லை என மக்கள் புகார் கூறினர். ….

அதற்கு பதலளித்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம்…

குடி தண்ணீர் கேட்டால் ரங்கசாமிக்கு தெரியாது, ஆனால் சாராயம் கேட்டால் உடனடியாக கொடுப்பார் நம்ம சாமியார் ரங்கசாமி இன்று கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி….

புதுச்சேரியில் போதை பொருட்கள் தங்கு தடை இன்றி கிடைக்கிறது போதைப்பொருள் விற்பனை மையமாக புதுச்சேரி மாறி வருகிறது என்றும் குற்றம் சாட்டிய அவர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பிரச்சாரம் முடிந்து வாகனம் புறப்பட்டவுடன் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பெண் ஒருவர் லிஸ்ட் போட்டு கணக்கெடுத்து பெயர்களை பட்டியலிட்டு எழுதினார் அப்போது பிரச்சாரத்திற்கு வந்தவர்களும் போட்டி போட்டு பெயர்களை கொடுத்தனர். இதனால் பிரச்சார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

திருவெறும்பூர் துப்பாக்கித் தொழிற்சாலையில் தேசிய தீ பாதுகாப்பு வார விழா

ஓட்டுக்கு காசு கொடுக்க வருபவனை கட்டையால் அடித்து உதைக்க வேண்டும்