in

நாமக்கல் அருகே 16 அடி உயரத்தில் உள்ள ஸ்ரீ சங்கபால நாகராஜர் திருக்கோவிலில் ஆனி மாத வெள்ளியை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பக்தர்கள் வழிபாடு

நாமக்கல் அருகே 16 அடி உயரத்தில் உள்ள ஸ்ரீ சங்கபால நாகராஜர் திருக்கோவிலில் ஆனி மாத வெள்ளியை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பக்தர்கள் வழிபாடு

நாமக்கல் அடுத்த ராசிபாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜநாகலட்சுமி திருக்கோவிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று இங்கு 16 அடி உயரத்தில் பக்தர்களுக்கு அருள்தரும் ஸ்ரீ சங்கபால நாகராஜருக்கு பால் தயிர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது .

 

மேலும் இங்கு புற்றுக்கண்ணில் அமைந்துள்ள அருள்மிகு ராஜ நாகலட்சுமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதில்பக்தர்கள் எலுமிச்சை வைத்து தீபம் ஏற்றியும் தேங்காய் உடைத்துவணங்கினர் .

இந்த ஸ்தலம் ராகு கேது நிவர்த்தி தளமாக திகழ்வதால் பிரதி வெள்ளி தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனை காலை 10 மணி அளவில் நடைபெற்று வருகிறது இந்நிகழ்வில் இன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் விழாவின் நிறைவாக புற்றுக் கண்ணில் பக்தர்களுக்கு அருள் தரும் அருள்மிகு ஸ்ரீ ராஜ நாகலட்சுமி மற்றும் ஸ்ரீ சங்க பால நாகராஜருக்கு மகா தீபம் காண்பிக்கப்பட்டது .

இதில் ஏராளமான கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்

What do you think?

நாமக்கல் நகர் சாய்பாபா ஆலயத்தில் குரு விழாயக்கிழமை முன்னிட்டு சிறப்புபூஜை மங்கள ஆர்த்தி ஏராளமானவர்கள் தரிசனம்