in

பிரபல சீரியல் நடிகரின் மகன் கடத்திச் சென்று சரமாரி தாக்குதல்

பிரபல சீரியல் நடிகரின் மகன் கடத்திச் சென்று சரமாரி தாக்குதல்

 

பிரபல சீரியல் நடிகரின் மகன் கடத்திச் சென்று சரமாரி தாக்குதல். பார்க்கிங் படப்பாணியில் கடத்திச் சென்ற சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சீரியல்கள் மற்றும் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் பிர்லா போஸ் இவர் திருமதி செல்வம் என்ற சன் டிவி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். மேலும் சன் டிவி கயல் சீரியலிலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இவர் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள அப்பார்ட்மெண்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவருடைய வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கும் ஒருவர் பிர்லா போஸின் காரை இடித்து விட்டதால் கோபத்தில் அவரிடம் சண்டை போட்டு இருக்கிறார்.

இருவருக்கு இடையே கடும் வாக்குவாதம் அந்த நிலையில் இது இருவரின் குடும்பப் பிரச்சனையாக மாறியது அந்த பிரச்சனையால் இளைஞர் பிர்லா போஸ்சை பழிவாங்க நினைத்து பிர்லா போஸ் வேட்டையன் படப்பிடிப்பிற்கு வெளியூர் சென்றபோது 9 பேர் கொண்ட கும்பல் அவரின் மகனை கடத்திச் சென்று சரமாரியாக தாக்கினர் .

பின்னர் சந்தேகம் வராத அளவிற்கு அவருடைய மகனே அவர் வீட்டிலேயே இறக்கிவிட்டு சென்று இருக்கின்றனர். இந்த சம்பவம் தெரிந்து மகனை பார்க்க ஓடிவந்த பிர்லா போஸ்ஸிடம் உங்கள் மகனுக்கு வெளி காயங்களை விட உள் காயம் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது பில்லா போஸ் இருக்கு தன் அப்பார்ட்மெண்டின் கீழ் வசிக்கும் இளைஞர் தான் தன் மகனின் கடத்தலுக்கு காரணம் என்று தெரிந்து அவர் மேல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்கின்றனர். ஒரு காரால் இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்ற இந்த செய்தி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

What do you think?

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூபாய் 254.80 கோடி மதிப்பீட்டில்

செம்பு கிரீடத்தை தங்க கிரீடம் என்று பொய் சொல்லி காணிக்கை கொடுத்த நடிகர்