in

மதுராந்தகம் ஸ்ரீ ஓசூர் மாரியம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்

மதுராந்தகம் ஸ்ரீ ஓசூர் மாரியம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்

 

மதுராந்தகம் அருகே அருள்மிகு ஸ்ரீ ஓசூர் மாரியம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த இரும்புலி கிராமத்தில் அருள்மிகு ஓசூர் மாரியம்மன் ஆலய புனராவர்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த ஜூன் 29ஆம் தேதி கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு
கணபதி பூஜை,கோ பூஜை, லட்சுமி பூஜை மற்றும் நவகிரக ஹோமம் என விசேஷ பூஜைகள் தொடங்கி இரண்டு நாட்களுக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

விழாவன்று காலையில் கிராம பொதுமக்கள் முன்னிலையில் யாக சாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசத்திற்கு கலசங்களை கொண்டு சென்ற சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தீபாரதனையும் காண்பிக்கப்பட்டு பின்பு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

அதன் பின்னர் கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

விபி ராம்ஜி திட்டத்தை திரும்ப பெற மறியல் போராட்டம்

திருவாடானை அருகே பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த துணை சுகாதார நிலையங்களை அமைச்சர் இன்று திறந்து வைத்தார்!