in

வேளாங்கண்ணி பேராலயத்தில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மும் மதத்தினர் சிறப்பு பிரார்த்தனை


Watch – YouTube Click

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல பேராலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மும் மதத்தினர் சிறப்பு பிரார்த்தனை. பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்.

நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மும் மதத்தினர் ஒன்றிணைந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையிலும் வேளாங்கண்ணி பேரூர் திமுக செயலாளர் மரிய.சார்லஸ் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு மரக்கன்றுகள், இனிப்புகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் துண்டு பிரசுரங்களை கடைவீதிகளில் விநியோகம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி பேரூராட்சி மன்றத் தலைவர் டயானா சர்மிளா, பொதுக்குழு உறுப்பினர் SPT.சார்லஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் ரெக்ஸ மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்


Watch – YouTube Click

What do you think?

ராசிபுரத்தில் ஸ்ரீ ஞான வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை

புத்தகம் பேனாவை வைத்து வழிபட்ட மாணவ மாணவிகள்