in

ராசிபுரத்தில் ஸ்ரீ ஞான வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை


Watch – YouTube Click

ராசிபுரத்தில் ஸ்ரீ ஞான வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்ஐசி அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீ ஞான வராஹி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் மற்றும் சொர்ண அபிஷேகம் போன்ற பல்வேறு வாசனை மிக்க திரவங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மேலும் ஏராளமான பெண்கள் தேங்காய் விளக்கு, பூசணி விளக்கு என வாழை இலை இட்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

அன்பே வா டெல்னா அறிமுகமாகும் புதிய சீரியல்..வைரலாகும் புகைப்படம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மும் மதத்தினர் சிறப்பு பிரார்த்தனை