in

பள்ளி ஆண்டு விழாவில் மஞ்சள் நிற பனியனில் 7 ம் நம்பர் தோனி படத்தோடு நடணம்


Watch – YouTube Click

வத்தலகுண்டு அருகே, பள்ளி ஆண்டு விழாவில், சி.எஸ்.கே (சென்னை சூப்பர், கிங்ஸ்) கிரிக்கெட் அணி மஞ்சள் நிற பனியனில் 7-ம் நம்பர் தோனி படத்தோடு நடண நிகழ்ச்சி.

பெற்றோர்கள்,பொது மக்கள் ஆரவாரம்.கோடை வெயில் அதிக அளவில் உள்ள நிலையில், பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட, அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வெயிலிலிருந்து தற்காத்து கொள்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கணவாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில், 10-வது ஆண்டு விழா நடந்தது. இதில் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ம.கா.பா. ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

மாணவ மாணவிகள் எதையும் நேர்மறையாக நினைக்க வேண்டும். எதிர்காலத்தில் நாம் என்ன ஆக விரும்புகிறோமோ? அதுவாக நினைத்து கற்பனையில் காட்சிப்படுத்தி பார்க்க வேண்டும் என்றார்.

பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் அணி தோனியின் 7-ஆம் நம்பர் மஞ்சள் பனியன் அணிந்து, கிரிக்கெட் மட்டையுடன் நடனம் ஆடினர். சென்னை அணி விளையாடிக்கொண்டிருந்த நிலையில், அதனை சக மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள், ஆரவாரம் செய்து பாராட்டினர். விழாவில், செல்போன் தீமை பற்றிய நாடகம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கோடை வெயில் அதிக அளவில் உள்ள நிலையில், பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட, அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வெயிலிலிருந்து தற்காத்து கொள்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில், சென்னை தொழில் அதிபர் இந்திரா கந்தசாமி மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை

12ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ள மாணவ, மாணவிகளுக்கு வழிக்காட்டி கல்வி கண்காட்சி