in

தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நெல்லை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தொடங்கியது


Watch – YouTube Click

தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நெல்லை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தொடங்கியது

 

தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நெல்லை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தொடங்கியது. கல்லூரி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இந்த கணக்கெடுக்கும் பணியில் பங்கேற்றுள்ளனர்.

ஐரோப்பிய, மங்கோலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பறவை இனங்கள் முதல் நாள் கணக்கெடுப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் காணப்பட்டுள்ளது.

14 வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி, மணிமுத்தாறு, சிற்றாறு நதியின் 60 பாசன குளங்களில் இன்றும் நாளையும் அகஸ்தியமலை உயிர்கோள காப்பகம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடைபெறுகிறது.

இந்த கணக்கெடுப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆறு குழுக்களாக பிரிந்து நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் உள்ள குளங்களில் கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்த கணக்கெடுப்பு பணியின் போது பறவைகளின் இனம், கூடுகள், குஞ்சுகள் மற்றும் பறவைகளின் வகை என தனித்தனியாக கணக்கெடுக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட உள்ளது.

நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்து வரும் கணக்கெடுப்பு பணியின் போது அதிக அளவில் நீர்காகம், சம்பு கோழி, சாம்பல் நாரை, பிளமிங்கோ, அல்லிக்குருவி போன்றவை காணப்படுவதாக கணக்கெடுப்பு பணியில் கலந்துகொண்டவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

நெல்லை மாநகரப் பகுதியில் அமைந்திருக்கும் பெரிய குளமான நயினார் குளத்தை சுற்றி இருக்கும் மருத மரம், இலுப்பை மரம், நீர்க்கடம்பை மரங்களில் பாம்பு தாரா வகை பறவைகள் நூற்றுக்கணக்கில் காணப்படுகிறது.

குறிப்பாக இந்த வகை மரங்களில் கூடுகட்டி பாம்புதாரா பறவைகள் குஞ்சு பொரித்து இருப்பதையும் காண முடிகிறது. அல்லி குருவிகள் குஞ்சுகளுடன் அதிகளவு இருப்பதையும் காணமுடிகிறது.

இது தவிர ஐரோப்பியாவை சேர்ந்த ஆலா இன பறவைகளும் மன்கோலிய நாட்டை சார்ந்த வரிதலை வாத்தினங்களும் கணக்கெடுப்பில் அதிக அளவு காணபட்டது.

தொடர்ந்து இன்றும் நாளையும் நெல்லை தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெறும் நிலையில் உள் நாட்டு வெளிநாடு பறவைகள் குறித்த கணக்குகள் கிடைக்க பெறும்.

கடந்த ஆண்டு நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு பணியின் போது 38 ஆயிரம் பறவைகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

குளங்களை பொதுமக்கள் தண்ணீர் இருக்கும் பகுதிகளாக மட்டும் பார்க்காமல் பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதிகளாக பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் அரசிற்கு வைத்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய ரஷ்மிகா மந்தனா

தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு மினி மரத்தான் போட்டி