in

20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்கப்பட்ட சம்பவம்


Watch – YouTube Click

20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்கப்பட்ட சம்பவம்

 

கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது இதற்கு சொந்தமான பல்வேறு நிலங்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் அமைந்துள்ளது.

அதனை நீதிமன்ற உத்தரவின் படி அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்‌.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் பவித்திரம் அருகே ரிச் இந்தியா ஹை டெக் சிட்டி என்ற பெயரில் கடந்த 2012 ஆம் ஆண்டு வீட்டு மனை பட்டாவாக பிரித்து சுமார் 20 கோடி மதிப்பில் ஆன 10 ஏக்கர் 19 சென்ட் இடத்தை பொதுமக்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு கோவில் நிலம் என அறிவிக்கப்பட்டு அதனை திருக்கோவிலுக்கு ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்ற ஊழியர் சரவணன், இந்து அறநிலை துறை இணை ஆணையர் ஜெய் தேவி மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள், காவலர்கள் உடன் நிலத்தை கையகப்படுத்தி கோவில் வசம் ஒப்படைத்தனர்.

இது குறித்து அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கரூர் மாவட்டத்தில் சுமார் 20 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்

செஸ் போட்டியில் தங்க பதக்கம் – மாணவனுக்கு – முதல்வர் ரங்கசாமி பாராட்டு