in

பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்


Watch – YouTube Click

பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்

 

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயிலில் மாசி மக தெப்ப உற்சவம் திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாளிலும் காலை சுவாமி திருவீதி புறப்பாடும், இரவு பல்வேறு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.

10ம் நாளான நேற்று காலையில் பெருமாள், ஸ்ரீதேவி, பூமா தேவியருடன் எழுந்தருளி தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து மூவரும் தெப்பத்தில் எழுந்தருள, நண்பகல் 12 மணியளவில் தெப்பக்குளத்தை ஒரு சுற்று சுற்றிவந்து தெப்பம் கண்டருளல் நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் மின்ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் எழுந்தருளி தெப்பக்குளத்தை 2 முறை சுற்றிவர தெப்ப உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு பட்டாச்சாரியார்கள் தீபாராதனை காண்பித்து துவக்கி வைத்தனர். பின்பு தெப்பம் தீர்த்த குளத்தை சுற்றி வந்தது. அப்போது குளத்தை சுற்றி இருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனும் முழக்கங்கள் இட்டு பெருமாளை வழிபட்டனர்.

இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மேலும் பெண்கள், ஆண்கள் என லட்சக்கணக்கானோர் தெப்பக்குளத்தை சுற்றிலும் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். மேலும் தெப்பம் படித்துறையை வந்தபோதில் அகல் விளக்கை எடுத்து ஆராதனை செய்து பெண்கள் வழிபட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ரத்தினவேல் பூஜை

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா