in

தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு மினி மரத்தான் போட்டி


Watch – YouTube Click

தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு மினி மரத்தான் போட்டி

 

நாடாளுமன்ற தேர்தல் வரும் சில நாட்களில் அறிவிக்கப்பட்ட இருக்கும் நிலையில் தேர்தல் தொடர்பான பணிகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்களிடம் வாக்கு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்டவைகள் தொடர்பாக தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மராத்தான் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் உள்ளிட்டோர் மினி மராத்தான் போட்டிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர் வ உ சி மைதானம் முன்பு தொடங்கிய மினி மரத்தான் ஓட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் ஆயுதப்படை மைதானம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வழியாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்றடைந்தது.

தொடர்ந்து அங்கு தரும் பட்டயங்களை பெற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் இல்லம், சவேரியார் கல்லூரி, மைய நூலகம் வழியாக மீண்டும் வ உ சி மைதானத்தில் நிறைவு பெற்றது.

சுமார் ஐந்து கிலோ மீட்டர் 600 மீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இந்த ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

ஓட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் என் வாக்கு என் உரிமை போன்ற தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெறும் வகையில் டீசர்ட், தொப்பி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நெல்லை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தொடங்கியது

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் பக்தர் 140 கி மீ பாதயாத்திரையாக பழனி கோயிலுக்கு சுவாமி தரிசனம்