in

அரசுக் கல்லூரி மூன்று மாதமாக ஊதியம் தரவில்லை


Watch – YouTube Click

மூன்று மாதமாக ஊதியம் தரவில்லை என்று அரசுக் கல்லூரி முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விரிவுரையாளர்கள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தோற்றுவிக்கப்பட்டு இயங்கி வந்தது.இந்த கல்லூரியில் 59 பேராசிரியர்கள் ஐந்து அலுவலக பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் இந்த கல்லூரி கடந்த 2020 ஆம் ஆண்டு அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு அனுமதி பெற்ற பாடப்பிரிவுகளில் பணிபுரியும் 50 ஆசிரியர்கள் மற்றும் நான்கு ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு மட்டும் அரசு மாதம் தோறும் ஊதியம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் மீதமுள்ள 9 ஆசிரியர்கள்  மற்றும் ஒரு ஆசிரியரல்லா பணியாளருக்கு  பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஊதியம் வழங்குவதற்கு இதேபோன்று மற்ற பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் தமிழக உயர்கல்வித்துறை பல்கலைக்கழகங்களுக்கு அரசு அனுமதி வழங்கும் வரை அனுமதி பெறாத பாடப் பிரிவுகளில் பணிபுரியும் கௌரவ விரிவு ரையாளர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் ஒன்பது கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஒருவர் என பத்து பேருக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வருவதாககவும் இதன் காரணமாக தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறி தங்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கல்லூரி முன்பு வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

ஸ்டாலினுடன் கார்கே சந்திப்பு

1.53 கோடி மதிப்பில் திருமண நிதி உதவிதொகை